கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11 பேர் மீண்டனர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 30, 2020

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11 பேர் மீண்டனர்!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 2 ஆயிரத்து 995 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதில் 123 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை 52 பேர் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.