தனிமையில் இருந்த யானைக்குட்டி வவுனியாவில் மீட்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 9, 2020

தனிமையில் இருந்த யானைக்குட்டி வவுனியாவில் மீட்பு



வவுனியா பூவரசன்குளம் பகுதியில் தனிமையிலிருந்த யானைக்குட்டி ஒன்றினை பொது மக்களின் தகவலுக்கு அமைய வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் நேற்று இரவு மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பூவரசன்குளம் வேலன்குளம் பகுதியில் மூன்று மாதம் நிறைந்த யானைக்குட்டி ஒன்று நேற்று மாலை தாய் யானையின்றி தனிமையில் அப்பகுதியில் இருப்பதை கண்ட பிரதேச வாசிகள் இவ்விடயம் குறித்து பூவரசங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் .

இதனையடுத்து, பொலிஸார் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் அங்கு சென்று யானைக்குட்டியை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட யானைகுட்டியை மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் கிரித்தலை யானைகள் சரணாலயத்திற்கு மீட்கப்பட்ட யானைக்குட்டியை கொண்டு செல்லவுள்ளதற்கான நடவடிக்கையினை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்