கன்னட ரிவி நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை செய்து கொண்டது கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை மரணம் இந்தியளவில் ரசிகர்களை வாட்டி வந்த நிலையில், மற்றொரு இளம் நடிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட டிவி நடிகர் சுஷீல் கவுடா நேற்று (ஜூலை 7) கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.
சீரியலில் பிரபலமாக நடித்து வந்த அவர், விரைவில் திரையுலகில் சலகா எனும் படத்தில் அறிமுகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சுஷீல் கவுடாவின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து பொலிசார் இதுவரை எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. தற்கொலை செய்து கொண்டற்கு ஏதேனும் கடிதம் எழுதிவைத்துள்ளரா என்று பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் கன்னட நடிகர் துனியா விஜய் நடிப்பில் உருவாகி வரும் சலகா எனும் படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். லாக்டவுனுக்கு பிறகு அந்த படம் வெளியாகவுள்ள நிலையில், திடீரென இப்படி தற்கொலை செய்து கொண்டு, குறித்து அறிந்த நடிகர் துனியா விஜய் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.