டிப்பர் பெட்டிக்குள் நசுங்கி இளைஞன் பலி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 5, 2020

டிப்பர் பெட்டிக்குள் நசுங்கி இளைஞன் பலி

யாழ்.நீா்வேலி பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பா் வாகனம் பழுது பாா்த்துக் கொண்டிருந்த இளைஞன் மீது டிப்பா் வாகனத்தின் சுமை பெட்டி விழுந்ததில் உடல் நசுங்கி உயிாிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் சற்று முன்னா் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் சுமை பெட்டியை ஜக் மூலம் துாக்கிவிட்டு அதன் கீழிருந்து பழுது பாா்த்துக் கொண்டிருந்தபோது ஜக் நழுவி சுமைப்பெட்டி இளைஞன் மீது விழுந்துள்ளது.

சம்பவத்தில் மானிப்பாய் பகுதியை சோ்ந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்