இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2076! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 5, 2020

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2076!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2076ஆக அதிகரித்துள்ளது.

குறித்த இருவரும் பஹ்ரேனில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 162 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 1903 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.