இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 17, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

UPDATE 02: நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர் இந்தியாவில் இருந்து நாட்டுக்குத் திரும்பியவர் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில்  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது.
UPDATE 01: இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 688ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2012 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் 665 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் மரணித்துள்ளனர்.