அங்குலான பதற்றம்: கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடுவிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, July 17, 2020

அங்குலான பதற்றம்: கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடுவிப்புஅங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டம் மற்றும் பதற்றநிலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, கைதுசெய்யப்பட்ட 9 பெண்கள் உட்பட 14 பேரே இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் அங்குலான பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர்கள் இருவர் நேற்று காலை பொலிஸ் அதிகாரிகளால் ஜீப் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து, பொலிஸ் நிலையத்தின் முன்னால் அப்பகுதி மக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் மற்றும் மக்களுக்கு இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இச்சம்பவத்தில் 8 பொலிஸார் காயமடைந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.