காட்டு யானையின் தாக்குதலில் கணவன், மனைவி உயிரிழப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 17, 2020

காட்டு யானையின் தாக்குதலில் கணவன், மனைவி உயிரிழப்பு!
புத்தளம்-  தம்பேயாய  பகுதியில்  காட்டு யானையின் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (வெள்ளிக்கிழமை)  காலை, தம்பேயாய பகுதியில் இறப்பர் பால் வெட்டிக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 57 வயதுடைய பெண்ணும்  70 வயதுடைய அவரது கணவருமே  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒக்கம்பிடிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது