வவுனியாவில் பதின்ம வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த நபர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 1, 2020

வவுனியாவில் பதின்ம வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த நபர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு!


வவுனியாவில் சிறுவன் துஸ்பிரயோகம் இருவர் கைது!!


சம்பந்தப்பட்டவர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு!


வவுனியாவில் பதின்ம வயது சிறுவன் ஒருவன் இரண்டு நபர்களால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை சேகரிப்பதற்காக வந்திருந்த வெளிமாவட்டத்தை சேர்ந்த இரண்டு நபர்களே சிறுவனை தனிமையில் அழைத்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தின்போது சிறுவன் சத்தமிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் இரண்டு நபர்களையும் கையும் மெய்யுமாக பிடித்து நையப்புடைத்ததுடன் விசாரணைக்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


யாவத்த பிரதேசத்தை சேர்ந்த சலுடீன் முகமட் இம்ரான் (35) மற்றும் காசிம் நஸ்மீர் (50) ஆகிய இருவருமே பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.