இலங்கை இளைஞரை திருமணம் செய்து கொண்டு தனது சொத்துக்களை இழந்த பிரித்தானிய பெண் எடுத்துள்ள அதிரடி முடிவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 1, 2020

இலங்கை இளைஞரை திருமணம் செய்து கொண்டு தனது சொத்துக்களை இழந்த பிரித்தானிய பெண் எடுத்துள்ள அதிரடி முடிவு!

இலங்கை இளைஞரை திருமணம் செய்து கொண்டு தனது சொத்துக்களை இழந்த பிரித்தானிய பெண் தனது சில சொத்துக்களை திரும்பப் பெற சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.


Diane Peeble (61) என்ற ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண் கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா வந்த போது அந்நாட்டை சேர்ந்த ப்ரியஞ்சனா (26) என்ற இளைஞரை சந்தித்துள்ளார்.

பின்னர் Diane ப்ரியஞ்சனா இருவரும் வயது வித்தியாசத்தை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

இதன்பின்னர் ப்ரியஞ்சனா ஏற்கனவே இளம் பெண்ணை திருமணம் செய்தவர் என Diane-க்கு தெரியவந்தது. இதையடுத்து ப்ரியஞ்சனாகாக அதிகளவில் பணத்தை Diane செலவு செய்துள்ளார்.



கடந்த 2017ல் பிரித்தானியாவில் உள்ள தனது வீட்டை விற்ற Diane கொழும்பில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.

இதோடு £31,000 மதிப்புள்ள மினி பேருந்தையும் ப்ரியஞ்சனாக்காக வாங்கி கொடுத்துள்ளார். மொத்தமாக £100k வரை கணவருக்கு செலவு செய்தார்.



இந்நிலையில் கடந்த 2017 மே மாதம் 30-ஆம் திகதி ப்ரியஞ்சனா அவர் நண்பர்கள் வீட்டில் சுட்டு கொல்லப்பட்டார்.

ப்ரியஞ்சனா வசதியாக வாழ்வதை பார்த்த அவர் நண்பர்கள் பணத்துக்காக அவரை கொன்றுவிட்டதாக Diane கூறினார்.


Diane முன்னர் கூறுகையில், என் மீதுள்ள காதலால் ப்ரியஞ்சனா என்னை மணக்கவில்லை என்பதை பின்னரே உணர்ந்தேன்.

பணத்துக்காக தான் என்னை அவர் திருமணம் செய்ய நினைக்கிறார் என எனது குடும்பத்தார் கூறியும் நான் முன்னர் கேட்கவில்லை. நான் ப்ரியஞ்சனானுடன் தங்கியபோது என்னை வீட்டில் அடைத்து வைத்து அவர் குடும்பத்தார் பணம் கேட்டு மிரட்டுவார்கள்.



எல்லா பணத்தையும் இழந்துவிட்டு கடனாளியாக சொந்த நாட்டுக்கு ஒருவழியாக திரும்பினேன் என வேதனை தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் அளித்த பேட்டியில், எனது கணவரின் இரண்டு சகோதர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் என் வீட்டில் வசித்து வருகின்றனர்.


அவர்கள் அங்கு வாழ தகுதியற்றவர்கள்.

பல ஆண்டுகளாக நான் என் வாழ்க்கையில் செய்த வேலையின் அடிப்படையில் அந்த வீடு கட்டப்பட்டது என கூறியுள்ளார்.

Diane இப்போது ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற முயன்று வரும் நிலையில் தனது சொத்துக்களில் ஏதேனும் உரிமை கோரக்கூடும் என்று நம்புகிறார்.



தொடர்ந்து Diane கூறுகையில், இது சிக்கலானது என்று எனக்குத் தெரியும், ஆனால் வங்கி பதிவுகள் வீட்டிற்காக செலுத்தப்பட்ட எனது பணம் மற்றும் பல விடயங்களை காட்டும்

நான் அவருடைய குடும்பத்திற்காக செலவிட்டவற்றில் பாதியை திரும்பப் பெற முடிந்தாலும், அது எனது ஓய்வு காலத்தில் பெரிய உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.