கண்ணிமைக்கும் நேரத்தில் 1 இலட்சம் பணத்தையும் மோதிரத்தையும் பறிகொடுத்த பெண்: தொடரும் கொள்ளையர்களின் அட்டகாசம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 1, 2020

கண்ணிமைக்கும் நேரத்தில் 1 இலட்சம் பணத்தையும் மோதிரத்தையும் பறிகொடுத்த பெண்: தொடரும் கொள்ளையர்களின் அட்டகாசம்

யாழ்.கொக்குவில் மேற்கு – கேணியடி பகுதியில் வேலைக்கு புறப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிளில் இருந்த கைப்பை திருடப்பட்ட நிலையில் அதனுள் இருந்த 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 1 மோதிரம் ஆகியனவும் திருடப்பட்டுள்ளது.


காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் குடும்ப பெண் பணிக்கு புறப்பட்டுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் ஆவணங்களை எடுக்க மறந்துவிட்டோம் என்பது ஞாபகம் வந்ததையடுத்து,

வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தனது கைப்பையை அதில் வைத்துவிட்டு வீட்டினுள் சென்று ஒரு சில நிமிடங்களில் திரும்பிவந்தபோது கைப்பை திருடி செல்லப்பட்டிருக்கின்றது.

கறித்த பையில் 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியன இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள சீ.சி.ரி.வி கமரா பதிவுகளை ஆராய்ந்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.