கல்கிஸை பகுதியில் சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரட்டுகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சீன பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரையோர வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து நேற்றை தினம் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சுமார் 25 ஆயிரத்து 600 சிகிரட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.