மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் குழுக்கள் தன்னை தாக்கியதாக புணாணை மீள்குடியேற்ற கிராமத்தில் வசிக்கும் கே.எம்.எஸ்.சேனாரத்ன (42) என்பவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் குழுக்கள் புணாணை விகாரை பகுதிக்கு பிரச்சார நடவடிக்கையில் பொருட்டு வருகை தந்திருந்தனர்.
குறித்த குழுவினர் பிரச்சார நடவடிக்கையில் ஈட்டிருந்த வேளையில் கே.எம்.எஸ்.சேனாரத்ன என்பவர் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக செயற்படுவதாக கூறியதன் பிற்பாடு இவர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியின் குழுவினர் இவரை தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான புணாணை மீள்குடியேற்ற கிராமத்தில் வசிக்கும் கே.எம்.எஸ்.சேனாரத்ன என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், தனக்கு இவர்களால் ஏதுவும் உயிர் ஆபத்துக்கள் வருமோ என்ற அச்சம் உள்ளதாகவும் புணாணை மீள்குடியேற்ற கிராமத்தில் வசிக்கும் கே.எம்.எஸ்.சேனாரத்ன தெரிவித்தார்.