Halloween Costume ideas 2015

இந்த தேர்தலிலும் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் விபுலாநந்தருக்கு குல்லா அணிந்துவிட்டு காஜியார் என்பார்கள்: கருணா விமர்சனம்எதிர்வரும் தேர்தலில் தமிழர்கள் தவறிழைப்பார்களாக இருந்தால் காந்திசிலைக்கும், விபுலாநந்தர் சிலைக்கும் குல்லா அணிந்துவிட்டு காஜியார் வருவதாக சொல்வார்கள் என்று முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணயின் தலைவருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரித்தார்.


வவுனியாவிற்கு நேற்று விஜயம் செய்த அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,வன்னி பிரதேசத்தினை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிலும் வாழ்வாதாரம் மேம்படுத்தாத நிலையிலும்வாழ்ந்து வருகின்றனர். அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக இன்று நாம் வன்னி தேர்தல் களத்தில் தமிழர் ஐக்கிய முன்னணியாக சுயேட்சையாக போட்டியிடுகின்றோம்.

கடந்த கால யுத்தத்தின் வடுக்கள் இன்றும் மாறவில்லை. எங்களது மாவீரர் குடும்பங்கள் போராளிகள் குடுமபம் மற்றும் கணவனை இழந்த பெண்களை கொண்ட குடும்பத்தலைவிகள் வாழும் மாவட்டமாக வன்னி மாவட்டம் காணப்படுகின்றது. எனவே இவற்றுக்கெல்லாம் சிறந்த தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காவே களத்தில் இறங்கியுள்ளோம்.

இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு காலாகாலமாக எமது மக்களை ஏமாற்றி வருகின்றது. தேசியம் என பேசிக்கொண்டு எதுவித தீர்வையும் பெற்றுத்தராமல் பல விடயங்களில் ஏமாற்றி செயற்படுகின்றது. கடந்த அரசாங்கத்தினையும் எதுவித நிபந்தனையும் இல்லாமல் முட்டுக்கொடுத்து காப்பாற்றியது தமிழ் தேசியக்கூட்டமைப்பும்தான். ரணிலையும் காப்பாற்றி அங்கிருந்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர்களாக்கியமைதான் கூட்டமைப்பு செய்த வேலை.அவர்கள் எங்கள் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. மாற்றாக 2 கோடி இலஞ்சம் பெற்றிருந்தார்கள். இதனை நான் கூறவில்லை. அவர்களுடன் இருந்த சிவசக்தி ஆனந்தன் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதே போல தமிழரசு கட்சியின் மகளீர் அணி தலைவியும் 21 கோடி ரூபாய் தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இது அனைவரும் அறிந்த விடயம். கூட்டமைப்பு தமிழ்மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது. இவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு அரசியலை முன்னெடுப்பதற்காகவே தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணணியை நாம் ஆரம்பித்திருந்தோம். இது அனைத்து தமிழ்மக்களிற்கும் உரியகட்சியாக இருக்கும். வெற்றிதோல்விக்கு அப்பால் வன்னிதொகுதியில் எமது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளோம்.

வன்னியில் முஸ்லீம் அரசியல் தலைவர்களால் திட்டமிட்ட வகையில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது, இவற்றை தடுப்பதற்கு வன்னியில் உள்ள தமிழ்மக்கள் உணர்வுடன் செயற்பட்டு எம்மை ஆதரிக்க வேண்டும் என்று பணிவாக கேட்டுக்கொள்கின்றேன். எந்த இனத்தை சார்ந்தவர்கள் என்றாலும் காணி இல்லாத மக்களிற்கு காணிகள் வழங்கப்பட வேண்டும். மகிந்த சிந்தனையில் ரந்திம என்ற ஒப்பந்தம் அதற்காகவே உருவாக்கப்பட்டது. எனினும் அத்து மீறி வருகின்ற குடியேற்றங்களை நாம் ஒருபோதும் வரவேற்க போவதில்லை.கோட்டபாய அரசாங்கம் எதிர்வரும் 20 வருடங்கள் ஆட்சியில் இருக்கும். ஏனெனில் ஐக்கிய தேசிய கட்சி இன்று சின்னாபின்னமாகியுள்ளது. தேர்தலின் பின்னர் பலமான ஒரு எதிர்கட்சி வரும் என்பதே சந்தேகமான விடயம் தான். எனவே அரசின் பலமும், நெருக்கமும் எமக்கிருக்கின்றது. அதன் மூலம் அரசுடன் இணைந்து தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று தொல்பொருள் ஆராட்சி என்ற பெயரில் சரியான திட்டமிடல் இல்லாமல் தமிழர்களின் ஆலயங்களிலும் காணிகளிலும் எல்லைக்கற்கள் போடப்பட்டிருக்கின்றது. இவற்றை நீக்க வேண்டும். அதனை நாம் செய்வோம். கிழக்கு தொல்பொருள் செயணி தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும். வடகிழக்கிலே பல கல்விமான்கள் இருக்கின்றார்கள். அவர்களையும் இணைத்துக் கொண்டு அந்த செயலணி செயற்பட வேண்டும். அதனை நிச்சயம் மீள்பரிசீலணைக்கு எடுக்கும் செயற்பாட்டினை ஐனாதிபதியூடாக செய்வோம்.முஸ்லீம் மக்களிற்கு எதிரானவர்கள் நாம் அல்ல. ஆனால் முஸ்லீம் அரசியல்வாதிகள் தீவிரவாத போக்கிலே தமிழர்களை திட்டமிட்டு ஓரம்கட்டும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதாவுல்லா அண்மையில் கூறினார் தமிழ்தலைவர்கள் அரசியலை கற்றுக்கொள்வதானால் அவரின் பின்னால் சில வருடங்கள் பைல் தூக்க வேண்டுமாம். அவருக்கு என்ன அருகதை இருக்கின்றது அதனை சொல்வதற்கு. அதே போல வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்று கிஸ்புல்லா கூறுகின்றார். அதனை ஓட வைப்பதற்கு அவர் யார். அதேபோல றிசாட் பதியுதீன் இங்கு தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். இவ்வாறனவர்களின் தீவிரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

கையாலாகாத தமிழ் தலைவர்கள் இருந்தால் தான் தங்களது விடயங்களை சாதிக்கலாம் என்பது முஸ்லீம் தலைவர்களின் நீண்டகால திட்டம். சிவப்பு குல்லா அணிந்த அரசியல்வாதி இராவணன் முஸ்லீம் என்று ஒரு அறிக்கை விட்டிருந்தார். இது ஒரு வேடிக்கையான விடயம். எனவே நாம் தவறிழைப்பபோமாக இருந்தால் காந்திசிலைக்கும் விபுலாநந்தர் சிலைக்கும் குல்லா போட்டுவிட்டு காஜியார் வருவதாக சொல்வார்கள். இவற்றை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்மையில் நான் விசாரணைக்கு சென்றதை தமிழ் தலைவர்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள். அவர்கள் கடந்த கால வரலாறுகளை பற்றி சிந்திக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்பட்டால் வடகிழக்கிலே பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் இணைவது சாத்தியமில்லாத விடயம். எனினும் நாம் அதற்கான ஒரு முயற்சியை எடுப்போம் என்றார்.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget