யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க வைத்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட வீரியம் குறைந்த குறித்த வெடிபொருளை வெட்டி தீ மூட்டியமையை அடுத்து அது வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இளைவாளை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.