யாழில் யுவதி குளிப்பதை எட்டிப்பார்த்தவர் நையப்புடைப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 19, 2020

யாழில் யுவதி குளிப்பதை எட்டிப்பார்த்தவர் நையப்புடைப்பு!

யாழில் யுவதியொருவர் குளிக்கும் போது இரகசியமாக இரசித்த ஆசாமி நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


கொக்குவில் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

யுவதியொருவர் வீட்டு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, வளவிற்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தபோது, யுவதியின் தாயார் அதை அவதானித்து, ஆசாமியை எட்டிப் பிடித்து கூச்சலிட்டுள்ளார்.இதையடுத்து அயலவர்கள் கூடி ஆசாமியை மடக்கிப் பிடித்தனர். அருகிலுள்ள திடலில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களும் அங்கு கூடி, ஆசாமியை உருட்டியெடுத்தனர்.

நையப்புடைத்ததில் ஆசாமி மயக்கமடைந்துள்ளார். பின்னர் பொலிசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

40 வயதான பிரதேசவாசியொருவரே நையப்புடைக்கப்பட்டுள்ளார்.