கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2 லட்சம் பேர் பாதிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 5, 2020

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2 லட்சம் பேர் பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகமெங்கும் கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளதாக அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
உலகின் 213 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பிரித்தானியா உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
மேலும் சில கட்டுப்பாடுகளுடன் விமான பயணங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு தனிமைப்படுத்தல் இன்றி சென்று வரலாம் என்ற சூழலையும் உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகமெங்கும் கொரோனாவுக்கு இலக்கானவர் எண்ணிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஜூலை 4 ஆம் திகதி சர்வதேச நேரப்படி மதியம் 2 மணி வரை பதிவான இந்த எண்ணிக்கையானது 212,326 என தெரியவந்துள்ளது.
இதில் பெருமளவு கொரோனாவுக்கு இலக்கான நாடுகளாக அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு பதிவானது கடந்த ஜூன் 28 ஆம் திகதி எனவும், அன்று மட்டும் உலகமெங்கும் 189,077 என பதிவாகியிருந்தது.
மேலும் இறப்பு எண்ணிக்கையானது நாளுக்கு 5,000 பேர் எனவும், கொரோனா பரவல் தொடங்கிய பின்னர் இதுவரை உலகமெங்கும் 11 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளானதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் கொரோனாவுக்கு எதிரான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறி வருவதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

உலக நாடுகள் விழித்துக் கொண்டு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.