இரண்டு வாரங்களுக்குள் நாட்டை உலுக்கும் செய்தி கிடைக்கும் – தொலைபேசி மூலம் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அச்சுறுத்தல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 5, 2020

இரண்டு வாரங்களுக்குள் நாட்டை உலுக்கும் செய்தி கிடைக்கும் – தொலைபேசி மூலம் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அச்சுறுத்தல்

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்துமாறு ஊடக நிறுவனம் ஒன்றின் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
தகவல்களை வெளியிடும் இந்த
நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவில்லை என்றால், தகவல்களை வழங்கும் இரண்டு ஊடகவியலாளர்களை மௌனிக்க செய்ய போவதாக வெளிநாடு ஒன்றில் இருந்து தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை சவாலுக்கு உட்படுத்தினால், இரண்டு வாரங்களுக்குள் நாட்டை உலுக்கும் செய்தி கிடைக்கும் எனவும் தொலைபேசியில் உரையாற்றியவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
இது சம்பந்தமாக குறித்த ஊடகத்தின் அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.