வவுனியாவில் பெண்கள் விடுதி கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 5, 2020

வவுனியாவில் பெண்கள் விடுதி கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!

வவுனியா – கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் இல்லத்தில் இருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில், விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள கழிவறையில் குறித்தபெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்


சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


சம்பவத்தில் ராயி செல்வராணி என்ற (17 – வயது) என்ற பெண்ணே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இவர் வவுனியா கோவில் புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்றுவருவதுடன், இவ்வருடம் இடம்பெறவிருந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது.