பொலநறுவை, வெலிகந்த பகுதியில்ல இதுவரையில் இலங்கையில் அடையாளம் காணப்படாத லட்ச கணக்கிலான வண்ணத்து பூச்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு லட்ச கணக்கிலான வண்ணத்து பூச்சுகள் மரங்கள் மற்றும் பயிர் செய்கைகள் முழுவதும் மூடியுள்ளது. வெயில் பட ஆரம்பித்தவுடன் இந்த வண்ணத்துபூச்சிகள் மின்சார தூண்களை முழுமையாக மூடிக்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வண்ணத்துபூச்சிகள் சிலவற்றை பிடித்த விவசாயிகள் அதனை போத்தல் ஒன்றுக்குள் போட்டு அது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட சேதம் போன்று இந்த வண்ணத்துபூச்சிகளினாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் உடனடியாக பரிசோதனை நடத்துமாறு விவசாய துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான இந்த வண்ணத்து பூச்சிகள் பயிர் செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.