ரஷ்யாவில் தொடர்ச்சியாக ஜன்னலிலிருந்து விழுந்து உயிரிழக்கும் மருத்துவர்கள் – நிலவும் மர்மத்தின் பின்னணி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 2, 2020

ரஷ்யாவில் தொடர்ச்சியாக ஜன்னலிலிருந்து விழுந்து உயிரிழக்கும் மருத்துவர்கள் – நிலவும் மர்மத்தின் பின்னணி

ரஷ்யாவில் தொடர்ச்சியாக மூன்று மருத்துவர்கள் ஜன்னலிலிருந்து விழுந்துள்ள விடயத்தில் மர்மம் நிலவுவதாக கருதப்படுகிறது.


அவர்களில் மூவர் இறந்து விட்டார்கள், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் மூத்த பொலிஸ் தடயவியல் நிபுணரான லெப்டினண்ட் கர்னல் Natalya Shcherbakova (45), மாஸ்கோவிலுள்ள மருத்துவமனை ஒன்றின் ஐந்தாவது மாடியிலுள்ள ஜன்னல் வழியாக விழுந்து உயிரிழந்துவிட்டார்.


அவர் அதே மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். Natalya, இப்படி ரஷ்யாவில் ஜன்னல் வழியாக விழுந்து உயிரிழக்கும் முதல் மருத்துவரல்ல என்பதுதான் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஏற்கனவே Dr Yelena Nepomnyashchaya (47) என்ற மருத்துவரும், Dr Natalya Lebedeva (48) என்ற மருத்துவரும் மருத்துவமனைகளின் ஜன்னல்கள் வழியாக 60 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்கள்.

அத்துடன், Dr Alexander Shulepov (37) என்னும் மருத்துவர், இதேபோல் மருத்துவமனை ஒன்றின் இரண்டாவது மாடியிலுள்ள ஜன்னல் வழியாக விழுந்து மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையிலும், தன்னை வேலை செய்ய தனது மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Alexander தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை அல்ல, ஏதோ தவறு நடந்துள்ளது என்கிறார் அவர்.

அவரும் அந்த பெண் மருத்துவர்களும், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் கடுமையான பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுப்பாடு நிலவுவது குறித்து புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதும் மர்மத்தை அதிகரித்துள்ளது.