யாழ்.குரும்பசிட்டியில் ஆயுதங்கள் மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, June 2, 2020

யாழ்.குரும்பசிட்டியில் ஆயுதங்கள் மீட்பு!யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குரும்பசிட்டியில் தனியார் காணி ஒன்றின் கிணற்றுக்குள் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் காணப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று நடைபெறும் அகழ்வுப் பணிகளின் போது பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுவருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குரும்பசிட்டி அம்மன் கோவிலுக்கு அண்மையில் உள்ள தனியார் காணி ஒன்றின் கிணற்றினுள் ஒரு தொகுதி வெடிபொருட்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததத்ற்கு அமைய இன்று நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுகப்பட்டுவருகின்றன.


இதன் போது பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஆயுதங்கள் காணப்படுவதாகவும் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன