வற்றாப்பளைக்குள் அனுமதிப்பத்திரம் இல்லாமல் நுழைபவர்கள் கைது செய்யப்படுவர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 7, 2020

வற்றாப்பளைக்குள் அனுமதிப்பத்திரம் இல்லாமல் நுழைபவர்கள் கைது செய்யப்படுவர்!

வற்றாப்பளைக்குள் அனுமதிப்பத்திரம் இல்லாமல் நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாக சுகாதாரப்பிரிவினர் அறிவித்து வருகிறார்கள்.
வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை (8) இடம்பெறவுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ஆலயங்களிலும் மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய திருவிழாவில் 72 பேர் கலந்து கொள்ளவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட நபர்கள் தவிர்ந்த வெளியாட்கள் ஆலயத்திற்குள், ஆலய வளாகப்பகுதிக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
ஒலிபெருக்கி மூலம் வற்றாப்பளையை அண்டிய பகுதிகளில் இது குறித்த அறிவித்தலை விடுத்து வருகின்றனர். அனுமதிப்பத்திரமின்றி உள்நுழைபவர்கள், கொரொனா அபாயமேற்படுமிடத்து தனிமைப்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

எனினும், புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான் மற்றும் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கால்நடையாகவும், துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஆலயத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.