திருநங்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த மரியாதை - யாழ் திருநங்கை ஈழநிலா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 2, 2020

திருநங்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த மரியாதை - யாழ் திருநங்கை ஈழநிலா

விடுதலைப்புலிகள் திருநங்கைகள் எவ்வளவு மரியாதையை கொடுத்தார்கள் என்பதனை யாழ் திருநங்கை ஈழநிலா நினைவுபடுத்தியுள்ளார்.


அவர் பதிவிட்டுள்ள பதிவிலிருந்து,

வெகுகாலமாக விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்கள் எழுத்தவண்ணமே உள்ளன. குறிப்பாக சாதிப்பாகுபாடு மற்றும் LGBTIQ சமூக மக்கள் இந்த இரண்டு விடயங்களிலும் பாராபட்சம் இருந்ததாக பலருடைய பதிவுகளில் பார்த்தேன்.

சாதியபாகுபாடுகள் பற்றி விடுதலைப்புலிகள் கைக்கொண்ட நடவடிக்கைககள் பற்றி நான் அறியவில்லை அதனால் அது பற்றி பேச நான் விரும்பவில்லை. LGBTIQ மக்கள் பற்றி குறிப்பாக திருநங்கைகள் நிலை அவர்கள் காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை பற்றி அனுபவித்தவர்கள் வாயினால் கேட்டறிந்த உண்மைகளை நான் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

1989ல் . யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் வசித்த ஒரு திருநங்கை தன் பாலியல் மாற்றத்தின் காரணமாக விடுதலைப்புலிகளின் புகார் மனுவுக்கு இலக்கானார். அழைத்து வந்து வந்து விசாரணைகளை ஆரம்பித்த போது; அப்போது சுண்ணாகம் தெல்லிப்பளை மகளிர் அணிக்கு பொறுப்பாக இருந்த சாம்பவி மற்றும் ரெட்ணம் அக்காவிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்தார்.



குறித்த முறைப்பாடானது தான் எந்த விதத்திலும் ஆண் இல்லை என்பதும் தன்னால் ஒரு ஆணைப்போல செயலாற்ற உடுத்த முடியாது என்பதையும் குறித்த திருநங்கை தன்நிலை விளக்கமாக முன்வைத்தார்.

அப்போது திருநர்கள் பற்றிய புரிதல் இல்லாத சூழ்நிலையில் குழப்பத்திற்கு உள்ளான மகளிர் அணியினர். கடிதம் ஒன்றிணை எழுதி யாழ்ப்பாணம் பழையபூங்காவில் இருந்த விடுத்தலைப்புலிகளின் காவல்துறை தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு குறித்த திருநங்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவுக்கு அனுப்பப்பட்டார் மருத்துவ குழுவினரின் உளவியல் மருத்துவர்களின் உளவியல் ஆய்வின் முடிவில் அவரை திருநங்கை என அங்கீகரித்து பெண் உடையில் பெண்களைப்போல் வாழலாம் எனவும் பிறரால் எந்த வகையில் கேலி நக்கலுக்கு இலக்காக நேர்ந்தால் தயங்காமல் விடுதலைப்புலிகளின் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம் எனவும் கடிதத்தின் மூலம் உறுதி செய்து அனுப்பப்பட்டார்.

மறுநாளே அத்திருநங்கை புடவை உடுத்தி தன்னை அலகரித்து வீதியில் நடந்த போது தெல்லிப்பளை முதல் மருதனார் மடம் வரை ஊரே வேடிக்கை பார்ததையும் தான் புல்லரித்து தலை நிமிராது நடந்து சென்றதையும் சொல்லும் போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

அதே வாரத்தில் மானிப்பாய் புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு இறைவழிபாட்டிற்கு சென்ற குறித்த திருநங்கையை ஐந்து இளைஞர்கள் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கியதால் மனஉளைச்சலுக்காகன அவர் விடுதலைப்புலிகளின் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டை ஏற்ற காவலர்கள் குறித்த ஐவரையும் கைது செய்து அவரை நக்கல் செய்யக்கூடாது என்றும் பூமியில் மனிதராய் பிறந்த அனைவரும் அவரவர் விருப்பின் பேரில் வாழ உரிமை உண்டு என அறிவுரை கூறி மீண்டும் இத்தவறை செய்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என எச்சரித்து அனுப்பப்பட்டனர். இதை அவர் அவர் சொல்லி முடிக்கும் போது கண்களில் கண்ணீர் சொரிய சொல்லி முடித்தார்.

தற்போது குறித்த திருநங்கை தனக்கென சமூக அடையாளத்தோடு தன்மரியாதையோடு வாழ்ந்து வருகிறார் யாழ் திருநங்கை ஈழநிலா என்பது இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.