வரலாற்று சிறப்புமிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா அனுமதிக்கப்பட்ட பக்கதர்களின் பங்களிப்புடன், சுகாதார நடைமுறைகளை பேணி எளிமையான முறையில் இன்று இடம்பெற்றது.
கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டு ஆலயத்தின் பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினரால் சிபார்சு செய்யப்படும் 80 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், ஏனைய பக்கதர்கள் திருப்பி அனுப்பப்படுவர் என்று மாவட்ட அரச அதிபர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றயதினம் பொங்கல் விழாவையொட்டி காலை முதலே அதிகளவான பக்கதர்கள் புதூர் ஆலயத்திற்கு செல்வதற்காக வருகை தந்திருந்தனர்,
எனினும் எ9 வீதி புதூர் சந்தியில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிசார் பொதுமக்களை ஆலயத்திற்குள் செல்ல விடாது திருப்பி அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.