பளையில் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்திற்குள் வெடிமருந்து திருட்டு சிக்கியது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 21, 2020

பளையில் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்திற்குள் வெடிமருந்து திருட்டு சிக்கியது!பளை பகுதியில் இரண்டரை கிலோ எடையுள்ள சி 4 வெடிமருந்து கொள்ளையிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. வெடிமருந்து மூட்டையை இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பளை பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் நிறுவனத்திற்குள் புகுந்த இரண்டு சந்தேகநபர்கள் அங்கு இருந்த வெடி மருந்துகளை திருடிக் கொண்டு வெளியில் வந்தபோது நிறுவனத்தின் காவலாளி கண்டதால் குறித்த வெடிமருந்து மூட்டையைப் போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கும் ராணுவத்துக்கும் தகவல் வழங்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினர் சோதனையிட்டனர்.அப்போது குறித்த மூட்டைக்குள் இரண்டரை கிலோ சி 4 வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இரு சந்தேக நபர்களையும் தேடும் நடவடிக்கையில் இராணுவம் மற்றும் போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.