ஹப்புத்தளை, கெல்பன் பெருந்தோட்ட தேயிலைப்புதருக்குள்ளிருந்து இரண்டரை அடி நீளமுள்ள சிறுத்தைப் புலி யொன்றின் சடலத்தை வனஜீவராசி திணைக்களத்தினர் இன்று 4-6-2020 பிற்பகல் மீட்டுள்ளனர்.
வனஜீவராசி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றையடுத்தே, குறிப்பிட்ட தோட்டத்திற்கு விரைந்து, சிறுத்தை புலியின் சடலத்தை மீட்டனர்.
சடலம் மருத்துவ பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.சிறுத்தைப்புலி எவ்வகையில் இறந்ததென்பதை யறிய தீவிர புலனாய்வு விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.