கோத்தா அரசாங்கத்தினால் புதிதாக அச்சிடப்பட்ட பணத்தில் 74 பில்லியன் பணத்தை காணவில்லையாம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 4, 2020

கோத்தா அரசாங்கத்தினால் புதிதாக அச்சிடப்பட்ட பணத்தில் 74 பில்லியன் பணத்தை காணவில்லையாம்?

தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக அச்சிடப்பட்ட 292 பில்லியன் ரூபாய் பணத்தில் 74 பில்லியன் எங்கே சென்றது என்றே தெரியவில்லை என சமகி ஜன பலவேகயவின் வேட்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

“மத்திய வங்கியில் 115 பில்லியன் ரூபாய் இருப்பு இருந்தது. அவர்கள் 292 பில்லியன் ரூபாயை அச்சிடுகிறார்கள். இதற்கிடையிலான வேறுபாடு 177 பில்லியன் ரூபாய்.

இதன் மூலம் நிச்சயமாக பொருளியல் விதிகளுக்கமைய எவ்வகையான கட்டுப்பாடுகள் விதித்தாலும் பணவீக்க அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது.

அதற்கு பதிலாக இருப்புக்களை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பதை அரசாங்கம் காட்ட வேண்டும். நமது ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதன் மூலமோ அல்லது நமது வெளிநாட்டு நாணய இருப்புக்களை அதிகரிப்பதன் மூலமோ ஒரு அரசாங்கம் எப்போதும் நம் இருப்புக்களை வலுப்படுத்த செயல்பட வேண்டும்.

அவற்றில் எதையும் கருத்தில் கொள்ளாமல் 292 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டு அதில் 218 பில்லியன் ரூபாய் சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இப்போது இங்கேயும் ஒரு சிக்கல் உள்ளது. 218 பில்லியன் ரூபாயை சந்தைக்கு அனுப்பப்பட்டால் மீதி 74 பில்லியன் ரூபாய் மாயமாகியது ! நாங்கள் மாயமாகியது என கூடியது அந்த பணம் சந்தைக்கு அனுப்பப்படவில்லை. இது அச்சிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் எந்த முறையிலாவது அவை தக்கவைக்கப்படுகின்றன. அந்த பணம் எங்கே? பிரச்சனை என்னவென்றால், பணத்திற்கு பொறுப்பான நாடாளுமன்றம் இன்று கூடாது. அரசாங்கமும் மத்திய வங்கியும் அத்தகைய பணத்தை அச்சிட வேண்டுமானால், அவர்கள் அனைத்து விடயங்களையும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

இல்லையெனில் அவர்களை நாடாளுமன்றத்தில் விசாரிக்க வேண்டும். இருப்பினும் 74 பில்லியன் ரூபா சந்தைக்கு வெளியிடப்படவில்லை. அப்படியானால், இங்கே ஒரு கடுமையான பிரச்சினை உள்ளது, ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.