கனடாவில் இரவு 10 மணிக்கு தனியாக இருந்த 14 வயது சிறுமியிடம் சென்ற இளைஞன் தன்னுடைய காரில் அவரை ஏறுமாறு கூறிய சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனடாவின் லண்டன் நகரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது,
சில தினங்களுக்கு முன்னர் அங்குள்ள பேருந்து நிலையம் நிழற்குடையின் கீழ் இரவு 10 மணிக்கு 14 வயதான சிறுமி தனியாக உட்கார்ந்திருந்தாள்.
அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றது, அதில் இருந்த இளைஞன் சிறுமியிடம், வந்து காரில் ஏறு என கூறியுள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி அருகில் இருந்த ஹொட்டலுக்கு ஓடி சென்று அங்கிருந்து பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார், ஆனால் அதற்குள் கார் அங்கிருந்து பறந்து சென்றுவிட்டது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், சிறுமி எங்களிடம் அளித்த தகவலின் படி சிவப்பு நிற காரில் தான் 30 வயதான இளைஞன் வந்துள்ளார்.
கருப்பு நிறத்திலான அந்த இளைஞனின் தலை வழுக்கையாக இருந்துள்ளது, மேலும் தெளிவாக பேசிய அவன் சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கிறான், இது தொடர்பான சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம்.
அந்த கார் ஓட்டுனர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் கூறலாம் என தெரிவித்துள்ளார்