கொரோனா தானாக அடங்கும் தமிழ் பெண் விஞ்ஞானி வெளியிட்ட தகவல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 2, 2020

கொரோனா தானாக அடங்கும் தமிழ் பெண் விஞ்ஞானி வெளியிட்ட தகவல்!

தடுப்பூசி இல்லாமலேயே கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டுவதற்கு ஏற்றது இந்தியாதான் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


உலக சுகாதார துறையின் உயரிய பதவியை பெற்ற இவர் சென்னையைச் சேர்ந்த 60 வயதான தமிழ் பெண் ஆவார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனிதர்களை வேட்டையாடி வரும் நிலையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பபுகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஒன்றரை ஆண்டுகளாகக் கூடும் என பல விஞ்ஞானிகளும் தெரிவித்தபடி இருக்கிறார்கள்.

720 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த உலகிலுள்ள அத்தனை பேருக்கும் தடுப்பு மருந்தைக் கொண்டு சேர்க்க மேலும் இரண்டு ஆண்டுகளாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் அதற்கு முன்பாக வைரஸை கட்டுப்படுத்துவது எப்படி என்பது பற்றி சௌமியா சுவாமிநாதன் ஒரு நேர்காணலில் கூறுகையில்,

1918 ஆம் ஆண்டு இன்புளூவன்சா நோய் தொடர்ச்சியாக மூன்று முறை சுழன்றடித்தது. இரண்டு வருடங்களுக்கு அந்த நோய் நீடித்தது.

இந்த நோய் பரவல் இரண்டு வழிகளால் நின்றது. ஒரு வழிதாக்கப்பட்டவர் இறந்து போனது. இன்னொரு வழி தாக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. இந்த இரண்டில் ஒன்றுதான் அந்த வைரஸ் பரவலை நிறுத்த உதவியது.

ஃப்ளூ பெருந்தொற்று ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக பரவியது. 1895 ஆம் ஆண்டில் அது முடிவுக்கு வந்தது. ஒட்டுமொத்த மக்களும் ஃப்ளூ காய்ச்சலுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றதால் அந்த நோய் முடிவுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் கொரோனா வைரஸ் பிரச்சினையும் தடுப்பூசி இல்லாத இந்த காலகட்டத்தில் இப்படித்தான் முடிவுக்கு வர வேண்டியிருப்பதாக கூறிய அவர், இந்தியாவை பொறுத்த அளவில் இந்த மந்தை நோய் எதிர்ப்பு சக்திக்கு (Herd immunity) ஏற்ற ஒரு நாடு. ஏனெனில் இங்கு 82 சதவீதம் பேர் 50 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் கூட இருக்கலாம். இலேசான அறிகுறிகள் இருக்கலாம். இறப்பு வீதம் என்பது 0.2 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என்றும், 50 முதல் 59 வயதுக்குட்பட்டோர் 8 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு நோய் தாக்கினால் இறப்பு சதவீதம் என்பது 0.4 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கும். 1 சதவீதம் என்ற அளவுக்கு கூட உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் 60 வயதுக்கு உட்பட்ட நபர்களை ஊரடங்கை தளர்த்தி இயல்பாக வாழ்க்கையை வாழ விடுவதால் அவர்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்கும் எனவும், இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்கு பிறகு மீண்டு வருவார்கள். அவர்கள் உடலில் அந்த நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் காரணமாக 99.7 சதவீதம் அளவுக்கு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவார்கள். எனவே இந்த நோய் ஒழியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.