ஆதரவு பேரணிக்குள் அச்சுறுத்தும் வேகத்தில் பிரம்மாண்ட ட்ரக்குடன் நுழைந்த வெள்ளையர்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 2, 2020

ஆதரவு பேரணிக்குள் அச்சுறுத்தும் வேகத்தில் பிரம்மாண்ட ட்ரக்குடன் நுழைந்த வெள்ளையர்!

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பொலிசாரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கு பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணிகள் நடந்துவருகின்றன. இதனால் அமெரிக்காவின் சில பகுதிகளில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
நேற்றிரவு, அப்படி Minneapolis நெடுஞ்சாலை ஒன்றில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவில் திடீரென அச்சுறுத்தும் வகையில் ட்ரக் ஒன்று நுழைந்தது. புயல் வேகத்தில் வந்த ட்ரக்கைக் கண்டு மக்கள் அச்சத்தில் அலறியடித்து சிதறியோடினர்.
அப்படி ஓடியிருக்காவிட்டால், பலர் ட்ரக்கில் சிக்கி உயிரிழந்திருக்கலாம். பின்னர், பேரணிக்காக திரண்டிருந்த மக்களே ட்ரக்கின் மீது ஏறி, அதை நிறுத்தினர். அதற்குப்பின்தான் தெரிந்தது, அந்த ட்ரக்கை ஓட்டி வந்தவர் ஒரு வெள்ளை இனத்தவர். அவரை ’நாலு தட்டு தட்டி’ பொலிசாரிடம் ஒப்படைத்தனர் மக்கள்.

ஏற்கனவே, ஒரு வெள்ளையின பொலிசார் கருப்பினத்தவரை கொன்றதால் வன்முறை வெடித்திருக்கும் நேரத்தில், இந்த வெள்ளையின ட்ரக் சாரதியால் யாராவது உயிரிழந்திருந்தால் அமெரிக்காவில் இரத்த ஆறுதான் ஓடியிருக்கும். பொலிசார் அந்த நபரின் பெயரை வெளியிடவில்லை.
கைது செய்யப்பட்டுள்ள அவர், காயங்கள் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த ட்ரக்கின் சாரதி ஏன் இப்படி செய்தார் என்பது தெரியாவிட்டாலும், அவர் வேண்டுமென்றேதான் கூட்டத்திற்குள் ட்ரக்கை செலுத்தினாற்போல் தோன்றுகிறது என்கின்றனர் பொலிசார்.