அனைத்துப் பாடசாலைகளும் யூன் 29 ஆரம்பமாகின்றது!! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 9, 2020

அனைத்துப் பாடசாலைகளும் யூன் 29 ஆரம்பமாகின்றது!!

அனைத்து அரசு பாடசாலைகளும் நான்கு கட்டங்களில் கீழ் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


அதன்படி முதல் கட்டமாக ஜூன் 29ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஜூலை மாதம் ஆறாம் திகதி தரம் 5 தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய மாணவர்களுக்காக பாடசாலை 2ஆம் கட்டமாக திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

மூன்றாம் கட்டமாக ஜூலை மாதம் 20ஆம் திகதி தரம்10 மற்றும் தரம் 12 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளன.

அதேபோல் நான்காம் கட்டமாக முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களை தவிர்ந்த 3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலை ஜுலை மாதம் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.