பயங்கரவாதி சஹ்ரானுக்கு உதவிய தன்னார்வ தொண்டு நிறுவன நிறுவுனர் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 3, 2020

பயங்கரவாதி சஹ்ரானுக்கு உதவிய தன்னார்வ தொண்டு நிறுவன நிறுவுனர் கைது


கடந்த வருடம் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் முதன்மை சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் பரப்புரைகள் மற்றும் ஆயுதப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவுனர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணைப் பிரிவினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.
கடந்த மாதம் சட்டத்தரடி ஹிஸ்புல்லா, ரிசாத் பதியூதீனின் சகோதரர் உள்பட 5 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சஹ்ரான் ஹாசிமின் பரப்புரைகள் மற்றும் ஆயுதப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவன நிறுவுனரான கல்பிட்டியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.