தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் களைகட்டிய போதை வியாபாரம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 9, 2020

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் களைகட்டிய போதை வியாபாரம்!

புத்தளம் கடுமயங்குளம் பகுதியில் 40 மில்லியன் ரூபா பெறுமதியான பிறவுண் சுகர் போதைப்பொருளுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடொன்றில் சூட்சுமமான முறையில் தயாரிக்கப்பட்ட அலுமாரிக்குள் போதைப்பொரருளை இவர்கள் மறைத்து வைத்துள்ளனர்.

இந்த பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதை தொடர்ந்தது, அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இந்தக் காலப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் களை கட்டியிருந்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தொடர்பான கைதியொருவரே இந்த வர்த்தகத்தை வழிநடத்தியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வீட்டுக்ள் இருந்த அலுமாரியிலேயே போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதற்காகவே சூட்சுமமான முறையில் அலுமாரி தயாரிக்கப்பட்டுள்ளது.

அலுமாரிக்குள் இருந்து முதலில் 2 கிலோ போதைப்பொருளை பொலிசார் மீட்டனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையிலேயே அலுமாரிக்குள் இருந்து மேலும் 2 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர். 9 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.