யாழ்ப்பாணம், நீர்வேலி தெற்கு பகுதியில் இன்று காலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வீட்டில் கசிப்பு வடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் மையம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த வீட்டிலிருந்து பத்து லிட்டர் கசிப்பு மற்றும் 10 லிட்டர் கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சட்டி பானை, முட்டி, எரிவாயு சிலிண்டர் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.