ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு – இருவர் காயம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 11, 2020

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு – இருவர் காயம்யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அத்தோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியன சேதமாக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புங்கன்குளம் வீதி வழியாக யாழில் இன்று (திங்கட்கிழமை) மதியம் 2.00 மணியளவில் 10 மோட்டார் சைக்கிளில் சென்ற கமி என்றழைக்கப்படும் குறித்த வாள்வெட்டுக் குழுவினர்,  முத்திரைச் சந்திக்கு சென்று அவ்விடத்தில் நின்ற 2 முச்சக்கரவண்டிகளை சேதப்படுத்தியதுடன், இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், இவ்வாறானதொரு சம்பவம்  இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.