சுகாதார அமைச்சுக்கு புதிய செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் இராணுவ உயர் அதிகாரி! - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, May 11, 2020

சுகாதார அமைச்சுக்கு புதிய செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் இராணுவ உயர் அதிகாரி!


சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர், மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கடமைகளை பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக இராணுவ மருத்துவப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நியமிக்கப்பட்டார்.

சஞ்சீவ முனசிங்க, இராணுவ மருத்துவ சேவை முன்னாள் பணிப்பாளர் நாயகமாகவும் இராணுவ மருத்துவ படையின் கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே இவ்வாறு சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக சுகாதார அமைச்சின் செயலாளராக பத்ராணி ஜயவர்தன செயற்பட்டு வந்த நிலையில் அவர் வர்த்தக அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.