கிளிநொச்சியில் சுமந்திரனுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 21, 2020

கிளிநொச்சியில் சுமந்திரனுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள்!

கிளிநொச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சியின் பல வீதிகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிரான குறித்த துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.
மேற்படி துண்டுப் பிரசுரங்களில் தமிழர்களில் தியாகங்களைக் கொச்சைப்படுத்திய சுமந்திரனைத் தோற்கடிப்போம் எனவும் வேண்டாம் சுமந்திரன் எனும் வாசகங்கள் காணப்படுகின்றன
அண்மையில் பேட்டியொன்றில் சுமந்திரன் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்தொன்றினை தெரிவித்திருந்ததாக பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது