யாழில் மலசலகூடக் குழிக்குள் போடப்பட்ட குழந்தை விவகாரத்தில் வெளியான பகீர் தகவல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 21, 2020

யாழில் மலசலகூடக் குழிக்குள் போடப்பட்ட குழந்தை விவகாரத்தில் வெளியான பகீர் தகவல்!

புத்தூர் கிழக்கு பகுதியில் பெற்ற குழந்தையை திருட்டுத்தனமாக மலசலகூட குழிக்குள் வீசிய பெண்ணை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதே பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் சடலம் மீட்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் உருத்திராபதி மயூரதன் முன்னிலையில் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை கணவனை இழந்த நிலையில், தகாத உறவின் மூலமே இக் குழந்தை பிறந்ததாகவும், அதனால் பிரசவித்த குழந்தையைக் கொலை செய்து பின்னா் மலசலகூடக் குழிக்குள் வீசியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தாய் தெரிவித்துள்ளாா்