ஞானசாரர் மனு ஜூன் 9ஆம் திகதி விசாரணை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 21, 2020

ஞானசாரர் மனு ஜூன் 9ஆம் திகதி விசாரணை!

ஞானசார தேரரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கை எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதிபதிகள் தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சுரசேன, காமினி அமரசேகர ஆகிய நீதிபதிகள் அடங்கிய ஆயம் இன்று (21) இந்த மனுவை பரிசீலித்தபோது இந்த முடிவை அறிவித்தது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட பொதுபலசேன பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக ஞானசாரர் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய, அதன் உறுப்பினர்கள் ஜனாதிபதி வக்கீல் நலின் அபேசேகேர, பேராசிரியர் ரத்னஜீவன் கூழ் மற்றும் குருநாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தீர்ப்பு வழங்கும்வரை, குருநாகல் மாவட்டத்தில் பொதுத் தேர்தல் நடைபெறுவதை தடைசெய்யுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.