நாடுமுழுவதும் நேற்று (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், நாளை அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படவுள்ளது.
பின்னர் ஜுன் 4ஆம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
ஜுன் 6ஆம் திகதி முதல் சகல மாவட்டங்களிலும் மீள் அறிவித்தல் வரையில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
இதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தததும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.