யாழ்ப்பாணத்தில் திடீரென இராணுவ பிரசன்னம் அதிகமாக காணப்படுவதுடன் , கெடுபிடிகளும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வீதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு , வீதியில் செல்வோரின் பதிவுகளை மேற்கொண்டனர்.
அந்தவகையில் யாழ். நகர் பகுதி , கலட்டி , நாச்சிமார் கோவிலடி , கொக்குவில் , திருநெல்வேலி பாற்பண்ணை பகுதி உள்ளிட்ட பல இடங்களில் நேற்று மாலை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதியில் செல்வோரின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை மோட்டார் சைக்கிள்களில் குழுக்களாகவும் இராணுவத்தினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை நீண்ட காலத்தின் பின்னர் இராணுவத்தினர் வீதிகளில் குவிக்கப்பட்டு பதிவு நடவடிக்கைகளை முன்னெடுப்பது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது