ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 26, 2020

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் பூதவுடல் நாளை (28) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

மறுநாள் (29) கொத்மலை, வேவண்டனிலுள்ள தொண்டமான் ‘பங்களாவில்’ மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். அதன் பின்னர் கொட்டகலை சி.எல்.எவ். வளாகத்துக்கு பூதவுடல் எடுத்து செல்லப்படும்.

மே 31 ஆம் திகதி நோர்வூட் மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.