கேரளாவை சேர்ந்த இளம்பெண் கோவாவில் மர்மமாக இறந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி கூறியுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் அஞ்சனா ஹரீஷ் (21). இவர் Brennen கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி கோவாவில் உள்ள விடுதிக்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கியபடி பொலிசாரால் மீட்கப்பட்டார்.
இதையடுத்து கேரள ஊடகங்கள் பல அஞ்சனா இறப்பதற்கு முன்னர் பாலியல் தாக்குதல்களை அனுபவித்துள்ளார் எனவும், கட்டாயப்படுத்தி மதுவை அவர் வாயில் சிலர் ஊற்றியுள்ளனர் எனவும் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் அஞ்சனாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தூக்கிட்டு கொள்ளும் போது மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி கூறியுள்ளார்.
மேலும் அவரை பாலியல் தாக்குதலில் ஈடுபடுத்தியதாக எந்த கண்டுபிடிப்பும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இல்லை என தெரிவித்துள்ளார்.
அஞ்சனா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்ட நிலையிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அஞ்சனா மார்ச் மாதத்தில் வெளியிட்ட பேஸ்புக் வீடியோவில் தான் இருபாலின (bisexual) சேர்க்கையாளர் என கூறியிருந்தார்.
இதோடு குடும்ப உறுப்பினர்கள் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப் படுத்துவதாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலும் அவரை மாற்று சிகிச்சைக்கு குடும்பத்தார் கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து தான் நண்பர்களுடன் வாழ விரும்புவதாக சட்டபடி அனுமதி வாங்கி கொண்ட அஞ்சனா அவர்களுடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் தான் கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.