பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 28, 2020

பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது!

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்க உள்ளது.

இதேபோல், பிரேசிலில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளது.

நாட்டில் மீண்டும் 3 நாட்கள் தொடர் ஊரடங்கு அமுலில் – சற்று முன்னர் வெளியான செய்தி

ஊரடங்கு சட்ட அமுலாக்கம் குறித்த புதிய அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 31ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜுன் 1ம் திகதி திங்கட் கிழமை முதல் ஜுன் 3ம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் மறுதினம் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும்.