முள்ளியவளையில் மிதிவெடிகள் மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, May 5, 2020

முள்ளியவளையில் மிதிவெடிகள் மீட்பு!

முள்ளியவளையில் போர்க் காலப்பகுதியில் நிலத்தில் புதையுண்ட மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை 03 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது குறித்த மிதிவெடிகள் அவதானித்த உரிமையாளரால் முள்ளியவளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து மிதிவெடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மிதிவெடிகள் நீதிமன்ற உத்தரவுக்கமைய அகற்றப்பட்டுள்ளதுடன் அவற்றினை அழிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.