மட்டக்களப்பு மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத திருக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 28, 2020

மட்டக்களப்பு மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத திருக்கை!மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களினால் 500 கிலோ எடை கொண்ட பாரிய இராட்சத திருக்கை மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த பாரிய திருக்கை மீன் கடல் அலைகளினால் கரைக்கு அடித்து வரப்பட்ட நிலையில் அப்பகுதி மீனவர்கள் குறித்த திருக்கை நேற்று மாலை பிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மீன் கரைக்கு பெருமளவு மீனவர்களால் இழுத்து வரப்பட்டு வெட்டப்பட்டு சுமார் ஒரு இலட்சம் ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோன்று, திருக்கையின் பூ மாத்திரம் 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அத்திருக்கையினை பார்ப்பதற்கு பெருமளவிலான பொது மக்கள் ஒன்று கூடியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன