கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனை வரவழைத்து கணவனை கழுத்தறுத்து கொன்ற மனைவி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 30, 2020

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனை வரவழைத்து கணவனை கழுத்தறுத்து கொன்ற மனைவி!

தமிழகத்தில் காதலனுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் அடுத்த கொடிக்கால்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இராமன். கட்டிடத்தொழிலாளியான இவருக்கும், சத்யா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சத்யா அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவர்களது வீட்டிற்கு அருகே வசித்து வரும் வாகன ஓட்டுநர் இராம மூர்த்தி என்பவர் சத்யாவிடம் நண்பராக பழகி வந்துள்ளார்.

இவர்களின் பழக்கம், நாளைடைவில், நெருங்கி பழகும், திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

இதை அறிந்த இராமன், தன் மனைவியை தொடர்ந்து கண்டித்துள்ளார். இருப்பினும், சத்யா தொடர்ந்து இராம மூர்த்தியிடம் பேசிக் கொண்டே இருந்ததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இப்படி இருவருக்கும் ஒவ்வொரு நாளும் சண்டையிலே சென்று கொண்டிருக்க, கடந்த 20-ஆம் திகதி

என்பவருக்கும் சத்யாவுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இராமன் இறந்துவிட்டதாகக் கூறி சத்யா உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் இறந்த இராமனின் உடலை முறைப்படி அடக்கம் செய்தனர். இருப்பினும் இராமனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் இலட்சுமணன் நாமக்கல் காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நாமக்கல் காவல்துறையினர் சத்யாவிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சத்யா தனது கணவருக்கு இரவு உணவில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்ததும், அதன் பின்னர் தனது காதலன் இராம மூர்த்தியை வீட்டிற்கு வரவழைத்து இராமனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உறவினர்கள் முன்னிலையில் நாடகமாடியதும் தெரியவந்தது.

அதன் பின் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட இராம மூர்த்தி மற்றும் சத்யா இருவரையும் கைது செய்த நாமக்கல் காவல்துறை சிறையில் அடைத்தனர்.