யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் சிஐடியினர் என தெரிவித்து வீடு புகுந்த அட்டகாசம் செய்த ரௌடிக்கும்பல் ஒன்று, 20 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர்.
இன்று (31) அதிகாலை 12. மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
சிஐடியினர் என தெரிவித்து 7 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் வாள், கத்தி, கொட்டன் என்பவற்றுடன் உள்ளே நுழைந்து, அட்டகாசம் புரிந்தனர்.
வீட்டில் உள்ளவர்களை தாக்கியதுடன், கத்தி முனையில் வீட்டிலிருந்த 20 வயது யுவதியை கடத்திச் சென்றனர்.
பின்னர் ஒரு மணித்தியாலம் வீட்டுக்கு அருகிலுள்ள ஆலயமொன்றில் யுவதி விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் யுவதியின் பெற்றோரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்களில் ஒருவன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் ஒன்றுவிட்ட சகோதரன் என்றும், அதனால் பொலிசார் சமரச முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றும் யுவதியின் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.