நினைவேந்தல் தீபத்தினை தட்டி விழுத்தி காலால் மிதித்து அநாகரிகமாக நடந்துகொண்ட இராணுவ சிப்பாய்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 18, 2020

நினைவேந்தல் தீபத்தினை தட்டி விழுத்தி காலால் மிதித்து அநாகரிகமாக நடந்துகொண்ட இராணுவ சிப்பாய்!

வட தமிழீழம், யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபத்தினை இராணுவத்தினர் தட்டி விழுத்தி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஒரு கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக சுடரேற்றப்பட்ட சுடரினையே இராணுவத்தினர் தட்டி விழுத்தியுள்ளனர்.

பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள இந்தக் கட்சியின் அலுவலகத்தின் முன்பாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் நினைவாக சுகாதார விதிமுறைகளைப் பேணி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவ்வேளை அவ்விடத்திற்கு வந்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அதற்கு அனுமதி இல்லை உங்களை கைது செய்வோம் என மிரட்டி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முனைந்தனர். அதற்கு கட்சியின் செயலாளர் நாம் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்துகின்றோம். உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த தடையில்லை எனக் கூறி அஞ்சலி நிகழ்வினை நடத்தினார்கள்.

சிறிது நேரத்தில் அஞ்சலி நிகழ்வை முடித்துவிட்டு தீபத்தை அகற்றிவிட்டு உள்ளே செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியமைக்கு அமைவாக ஏற்றப்பட்ட சுடர் எரிந்து கொண்டு இருந்ததனால் அதனை அணைக்காது அது அணைந்த பின்னர் அதனை அகற்றுகிறோம் என கட்சியின் செயலாளர் கூறி அவர்கள் அலுவலகத்திற்குள் சென்றுள்ளனர்.

அதனையடுத்து அவ்விடத்தில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினரும் போலீசாரும் சில நிமிடத்தில், இராணுவத்தினர் மட்டும் தமது ஜீப் ரக வாகனத்தில் திரும்பி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் நினைவாக ஏற்றப்பட்ட தீபத்தை அணைத்து அதனைத் தூக்கி வீசி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர்.

இறந்தவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட தீபத்தை அணைத்து அதனை தூக்கி வீசிய இராணுவத்தின் அனாகரிக செயற்பாடு உயிரிழந்தவர்களின் ஆத்மாக்களை அவமதிக்கும் செயற்பாடு என கட்சியினர் தெரிவித்தனர்.